கலால் துறை முன்பு வரும் 18 ம் தேதி போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு..
புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம்,
புதுச்சேரியில் ஏற்கனவே 800 மதுபான கடைகள், 200 ரேஸ்ட்ரோ பார், பத்து மதுபான தொழிற்சாலையில் உள்ளன. இதனையும் மீறி புதிதாக 8 மதுபான தொழிற்சாலைகளை கொண்டுவர இருக்கும் புதுச்சேரி அரசின் புதிய மதுபான கொள்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
புதிய மதுபான கொள்கை மூலம் 500 கோடி ரூபாய் வருமானம் பெற இருப்பதாக கூறும் முதல் அமைச்சர் ரங்கசாமி,அந்த தொகையை காமராஜர் கல்வித் திட்டத்திற்கு செலவிட இருப்பதாக கூறுவது காமராஜருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என சலீம் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் போதைப்பொருட்கள் அதிகமாக புதுச்சேரிக்குள் நுழைந்துள்ளன. பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 8 மதுபான தொழிற்சாலைகளை கொண்டு வருவதால் நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்படும்.எனவே புதிய மதுபான தொழிற்சாலையை கைவிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலால் துறை முன்பு வரும் 18 ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தெரிவித்தார்.
No comments